Thursday, January 18, 2024

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி.

முளைப்பாரி தயார் செய்து..

காப்பு கட்டுதல் தொடங்கி ..

கலர் காகிதம் கட்டி ..

இனிப்புகள் சுட்டு ..

உற்றார் உறவினர் அழைத்து..

கோலங்கள் வரைந்து.

பலூன் கடை வந்துருச்சு என சிறுவர்கள் ரீங்காரமிட்டு..

ஊர் கூடி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து...

(பொங்கல் நல்லா விழுந்திருக்கு இந்த வருஷம் நல்லா இருக்கும்..,

 கண்ணீர் விட்டு பொங்குது பொங்கல் 

 இந்த வருடம் எப்படி இருக்குமோ??)

என்ற ஆத்தாக்களின் குரலோடு கோவில் மைக் செட்டின் சத்தமும் சேர்த்து ஒலித்து ..

பொட்லி சத்தம் விண்ணை பிளந்து..

காளியம்மனுக்கு சப்பரம் எடுத்து..

உடுக்கை அடித்து..

அண்ணமார் கதை படித்து..

 படியாளம் வீழ்ந்து எழுந்து..

மனதில் வேண்டுதலோடு கிரி சுற்றி கொடுத்து..

பறை இசை முழங்க அம்மனுக்கு பூவோடு எடுத்து...

சிறுமியர்களும் மங்கையர்களும் மாவிளக்கை அழகுபடுத்தி..

கோவில் வந்து காளியம்மனை வணங்கி..

விரதம் விட்டு..

மாடு கன்றுகளை குளிப்பாட்டி..

பட்டி பொங்கல் வைத்து..

மாடுகளுக்கு பிரசாதங்களை ஊட்டி..

சிறுவர் சிறுமி விளையாட்டு போட்டி நடத்தி..

சட்டி உடைத்து...

ஜல்லிக்கட்டு நடத்தி..

குழந்தைகளுக்கு பரிசு வழங்கி..

கும்மியடித்து மகிழ்ந்து..

முளைப் பாரியை ஆற்றில் விட்டு...


அதற்குள் முடிந்ததா பொங்கல்?? எப்போது அடுத்த வருடம் வரும் என அனைவரையும் ஏங்க வைத்து..

வருட வருடம் போல் இந்த வருடமும் மிகச் சிறப்பாக நஞ்சை மண்ணில் மாபெரும் பொங்கல் பண்டிகை (2024)நடைபெற்று நிறைவடைந்தது

Friday, February 28, 2020

கை வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
!
1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை சுகமாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Monday, December 16, 2019

மகள்களை பெற்ற அப்பாகளுக்கு


வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது
அம்மாவா ?
அப்பாவா ?
எனும் ஒர் பெரும் கேள்வி இன்றும் பலரிடத்தில் நம்மால் காண முடியும்
அதை தான் கருவாக கொண்டு விவரிக்கிறது இந்த பதிவு
பதின் பருவ பெண் குழந்தைகளை வளர்த்திட வேண்டியது
தாயா ??
தந்தையா ??
🌻உண்மையில் உங்கள் பதின் பருவ மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
🗣தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !
💃ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு
நண்பன் !
பாதுகாவலன் !
ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் ! பண்புகளை ஊட்டுபவர் !
#வழிகாட்டி எனும் Protective Guide !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
🗣ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
🗣ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.
🌻எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
💃சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில் , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.
என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.
💃மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.
🌷திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள்.
"என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,
"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்.
🌷எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்.!
🗣என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்,
🌻ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் மகள் உங்கள் மகள் தான்
உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்,
🌻ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்
"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி "
என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள்
"டாட்....எனக்கு இது வேணும்.
முடியுமா ?!
முடியாதா ?
" என பிடிவாதம் பிடிப்பாள்.
உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்.
ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.
🌷நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.
💃"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "
என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர
" அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது "
என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
🗣பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்.
அது தான் முக்கியம்.
🌷ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
"என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."
என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது,
நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.
🌷இன்னொரு விஷயம் , உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.
அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,தலையைக் கோதிப்பாராட்டுவதோ ,
செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.
ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.
மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.
நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
💃அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.
வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்
🗣நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.
சரி ! மதிக்கிறீர்கள்.
சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
💃டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.
ஆனந்தம் ,
கவலை ,
எரிச்சல் ,
சோகம்
என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"
என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !
💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள்.
பிரச்சினைகள் –
விபரங்கள் ,
தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
💃அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்
அடிக்கடி உங்கள் மூடு Mood swings மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது "
என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.
💃அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்,
"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை
என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.
🗣குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
🌷ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,
பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் Unconditional Love நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்,
👨‍👩‍👧~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.
"STRONG FATHERS - STRONG DAUGHTERS "
என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.
👨‍👩‍👧"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "
எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்,
👨‍👩‍👧"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்"
என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்



💃இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம் ..!!
பெண்குழந்தைகள் ,
நம் வீட்டின்
நம் நாட்டின்
நம் பூகோளத்தின் வரம்
அவரகளை வளர்ப்பது என்பது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு ,
அதனை வெல்வது நம் கடமை !!தன் மூலம்

Wednesday, December 11, 2019

DHARAPURAM AMARAVTHI SILLAI

தாராபுரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட அமராவதி சிலை மேம்பால பணிகளுக்காக இன்று (10.05.2019) அகற்றப்பட்டது.

Saturday, September 21, 2019

படிக்க பின்பற்ற..

#இதெல்லாம் நாம் மறந்த #நல்லபழக்கங்கள்

அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர் )

முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....

நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

** நீங்கள் ஓட்டுனராகவோ ,
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

** முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

** நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

** வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

** உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

** வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

** புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

**
** ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

** பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

** ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

** ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

** பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

** ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

** டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

** மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

** ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

** குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

#நாகரிகங்கள் ....

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...

Saturday, August 10, 2019

புரிபவர்களுக்கு (ம்) புரியும்

உருவாக்கிய அன்பிற்கும்.,
உருவான அன்பிற்கும்..
இடையேயான
தூரம் கண்டேன்.
மனதால் நொந்து விட்டேன்..
விலக்கக் கண்டேன்..
விளங்கி விட்டேன்..
முற்றிலும் விலகி விட்டேன்...

Sunday, July 28, 2019

மாற்றம்

*மாற்றங்களை* வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்...!!
இல்லையேல் அவை உங்களை ஒதுக்கி விட்டு உங்களை தாண்டி முன்னே சென்றுவிடும்......

கோவம்

வெளியே காட்டிய கோபம்
மன்னிப்புக்கு வழி தேடும்..!!

உள்ளே அடக்கிய கோபம்
பழிக்கு வழி தேடும்..!!

புடிச்சா படி

✍கடலில் பெய்யும் மழை பயனற்றது,
பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.


✍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.

✍ பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

✍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

✍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.


✍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்

✍எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

Sunday, May 12, 2019

IPL 2019 final

விளையாட்டு
கேட்ச் ட்ராப் v

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.



ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமும், சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லாமலும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொதப்ப 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல வாட்சன், டூபிளசிஸ் ஓப்பனிங் கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறான அதிரடியுடன் தொடங்கிய இந்த ஜோடி முதல் மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தது. நான்காவது ஓவரை பிடித்த இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என குர்னால் பாண்டியா ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டும் ஆனார். அதன்பிறகு வந்த ரெய்னா 8 ரன்களுக்கு வெளியேற அம்பதி ராயுடு ஒரு ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறிய சென்னை அணிக்கு கேப்டன் தோனியும் அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை. ஹர்திக் வீசிய 13வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.



கடைசி கட்ட பரபரப்பு

இதன்பிறகு டீம் அவ்வளவு தான் என நினைத்தபோது தான் பிராவோவுடன் சேர்ந்து தனது அதிரடியை காட்டினார் வாட்சன். சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர் என மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், குர்னால் பாண்டியா வீசிய 18வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதகளம் செய்தார் செய்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18.2வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராவோ வெளியேறினார். அடுத்ததடுத்த பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க அந்த ஓவரின் கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா மூலமாக நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஆறு பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா பந்துவீசினார்.

கேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை!#MIvCSK
41 minute's ago
`எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் எனச் சொன்னதில்லை!' - ஸ்டாலினைக் கிண்டல் செய்யும் எடப்பாடியின் சர்ச்சைப் பேச்சு
2 hour's ago
'அயோக்யா' என்னுடைய கதை?! - பார்த்திபன் பரபரப்பு குற்றச்சாட்டு
8 hour's ago


முதல் இரு பந்துகளில் வாட்சனும், ஜடேஜாவும் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். ஐந்தாவது பந்தை மலிங்கா புல்டாசாக வீச அதில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற போது மலிங்காவின் யார்க்கர் பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக ஒரு ரன்னில் சென்னை அணி கோப்பையை நழுவவிட்டது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.

Wednesday, May 8, 2019

உண்மை..

இயலாதவன் கையில் எடுக்கும்
இறுதி ஆயுதமே " *விமர்சனம்* ".!!


இயன்றவன் அதை தடுக்க
ஏந்திடும் ஆயுதமே " *புன்னகை* "..!!

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....