Thursday, January 18, 2024

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி.

முளைப்பாரி தயார் செய்து..

காப்பு கட்டுதல் தொடங்கி ..

கலர் காகிதம் கட்டி ..

இனிப்புகள் சுட்டு ..

உற்றார் உறவினர் அழைத்து..

கோலங்கள் வரைந்து.

பலூன் கடை வந்துருச்சு என சிறுவர்கள் ரீங்காரமிட்டு..

ஊர் கூடி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து...

(பொங்கல் நல்லா விழுந்திருக்கு இந்த வருஷம் நல்லா இருக்கும்..,

 கண்ணீர் விட்டு பொங்குது பொங்கல் 

 இந்த வருடம் எப்படி இருக்குமோ??)

என்ற ஆத்தாக்களின் குரலோடு கோவில் மைக் செட்டின் சத்தமும் சேர்த்து ஒலித்து ..

பொட்லி சத்தம் விண்ணை பிளந்து..

காளியம்மனுக்கு சப்பரம் எடுத்து..

உடுக்கை அடித்து..

அண்ணமார் கதை படித்து..

 படியாளம் வீழ்ந்து எழுந்து..

மனதில் வேண்டுதலோடு கிரி சுற்றி கொடுத்து..

பறை இசை முழங்க அம்மனுக்கு பூவோடு எடுத்து...

சிறுமியர்களும் மங்கையர்களும் மாவிளக்கை அழகுபடுத்தி..

கோவில் வந்து காளியம்மனை வணங்கி..

விரதம் விட்டு..

மாடு கன்றுகளை குளிப்பாட்டி..

பட்டி பொங்கல் வைத்து..

மாடுகளுக்கு பிரசாதங்களை ஊட்டி..

சிறுவர் சிறுமி விளையாட்டு போட்டி நடத்தி..

சட்டி உடைத்து...

ஜல்லிக்கட்டு நடத்தி..

குழந்தைகளுக்கு பரிசு வழங்கி..

கும்மியடித்து மகிழ்ந்து..

முளைப் பாரியை ஆற்றில் விட்டு...


அதற்குள் முடிந்ததா பொங்கல்?? எப்போது அடுத்த வருடம் வரும் என அனைவரையும் ஏங்க வைத்து..

வருட வருடம் போல் இந்த வருடமும் மிகச் சிறப்பாக நஞ்சை மண்ணில் மாபெரும் பொங்கல் பண்டிகை (2024)நடைபெற்று நிறைவடைந்தது

No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....