அன்புத் தோழிக்காக சில வரிகள் .......
நீ என்னருகில் இருந்ததில்லை
என்னை விட்டு விலகியதும் இல்லை !
எத்தனை சண்டைகள்,
எத்தனை சமரசங்கள் ,
எத்தனை முடிவுகள்,
எத்தனை கெஞ்சல்கள்,
எத்தனை கொஞ்சல்கள்
என்ன தான் சண்டை இட்டாலும்
சமாதானம் இன்றி உறங்காதே என்பாய்..
சமாதானம் செய்ய வந்தால் மீண்டும் சண்டை இடுவாய்..
நான் வருந்தும் போது
நீ கறைவாய் ...
என் சிறப்பு நாட்களில் நீ வெகு சீக்கிரம் எழுவாய்..
என் தேவைகளை அறிந்து எனக்கு மகிழ்ச்சி தருவாய் ...
என்னை கஷ்ட படுத்திய நான் காதலித்த பெண்ணை
என் முன்னே தீட்டி தீர்த்தாய்.,
அவளுக்கு ஆதரவாய் பேசிய
என்னை நீ தேவையில்லை
என்று வெட்டி முறித்தாய்..
நமது சண்டைகளும் ,உனது கோவமும் புதிதா என்ன ?
மீண்டும் வந்தாய் ..
மன்னிப்பாய் நண்பா..
ஆறுதல் சொல்ல வேண்டிய நான்
ஆத்திரம் அடைந்தேன் என்று ..
( உணர்ந்தேன் உன் பாசத்தை )...
நான் கவிதைகள் சொல்லும் போது
காதை பொத்தி கொண்டு
அருமை அருமை என்பாய் ..
அறிவுரை கூறும் போது அறுவை என்பாய்
பின் அம்மாவின் அக்கறை உன்னிடம் என்று
என்னை சிலிர்க்க வைப்பாய்....
உன் தாய் தந்தை நண்பர்கள் என
அனைவரிடத்திலும் புகழாரம் பெற்று தந்தாய் எனக்கு .!
நீ அழகில்லை
உன் குரலில் வசியமில்லை
ஆனால்
என் அன்பு தோழியே
எனக்கு உன்னைவிட யாரும் சிறப்பாக படவில்லை
ஏனெனில்
உன் குணம் பேரழகு...
உன்னிடம் தான் நான் கற்று கொண்டேன்
உண்மை நட்பின் மகத்துவத்தை ...
என் இன்பத்திலும் , துன்பத்திலும்
என்னுடன் இருந்தாய் நிழல் போல ....
ஒரு நாள் திருமணப் பந்தலில்
கலந்து போனாய் உன் ஆன்மாவோடு ...
பின்பு தான்
உணர்ந்தேன் தனிமையின் வலியை...
உன்னிடமிருந்த தாய்மையின் அன்பை ....
....
தாராபுரம் சதீஸ்