Thursday, November 3, 2016

பாட்டி.

''பாட்டி இல்லாத வீடு''

பாட்டி... பாக்கு இடிக்கும்
சத்தமே - எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!

அப்பா, அடிக்க
வரும்போதெல்லாம்....
பாட்டியே எனக்கு,
பாதுகாப்பு வளையம்!

கண்ணாடி விளக்கோடு....
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!

ஆடு கோழி கூட....
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல!

கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்....
நினைத்துக் கொள்வேன்,
"அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?!" என்று.

திருநீறு பூசி, உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி,
தாத்தா சாவிற்குப்பின்.....

நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்,
எதிரே வராததில் இருக்கிறது....
அவளது அறியாமையும்,
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!

பாட்டியின் ஆசையே....
என் திருமணத்தைப்
பார்ப்பதும்,
பின் இறப்பதும் தான்!

காரணம் கேட்டால்,
"செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்"
என்பாள் அந்த மகராசி!

கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது....
மண்பானை சமையல்,
மக்காச்சோளக்கூழ்,
மரக்குதிர் மட்டுமல்ல!

தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!

பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!

இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து.....

'தாத்தா பாட்டி இல்லாத வீடு'
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!

ஒருபோதும்....
பேரப்பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!

படித்ததில் பிடித்தது

Sonthapanthangal

வயல்வெளி பார்த்துவறட்டி தட்டிஓணாண் பிடித்துஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடிஎப்படியோ படித்த நான்ஏறிவந்தேன் நகரத்துக்கு !

Join Only-for-tamil

சிறு அறையில் குறுகிப் படுத்துசில மாதம் போர்தொடுத்துவாங்கிவிட்ட வேலையோடுவாழுகிறேன் கணிப்பொறியோடு !
Join Only-for-tamil

சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்துகாலை உணவு மறந்துநெரிசலில் சிக்கிகடமை அழைக்ககாற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !
மனசு தொட்டுவாழும் வாழ்க்கைமாறிப் போகுமோ ?

Join Only-for-tamil
மௌசு தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?
சொந்த பந்தஉறவுகளெல்லாம்ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை 
தொலைந்து போகுமோமொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன் 
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?

Join Only-for-tamil

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....