தவறு செய்கிற நேரங்களை தவிர
மீதி எல்லா நேரங்களிலும்
ரொம்ப நல்லவன் நான்...
தவறுதலாய்க்
கீழே விழுந்து விடுபவர்களைப் பார்த்து
சிரித்துவிடுகிற
சிறுபுத்தி கொண்ட
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவனே
நானும்...
திட்டமிட்டு யாரையும் ஏமாற்ற
நினைத்ததில்லை என்றாலும்
எதாவது உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக மீதி தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில் நானும் ஒருவனே...
நான் தெரியாமல் செய்துவிட்டதாக
சொன்ன தவறுகள் எல்லாம்
நான் தெரிந்தே செய்தவைகள்தாம்....
ஆயிரமாயிரமாண்டுகால
அனுப
எல்லா உயிர்களையும்
ஊனமற்ற உயிர்களாக படைக்க
கடவுளாலேயே முடியவில்லை என்கிறபோது
அனுபவம் ஏதுமற்ற
எனது முதல் வாழ்வில்
குறைகளற்று வழத்தவறிவிட்டேன்
என்பது
பெரிய குற்றமாக படவில்லை எனக்கு....
மொத்ததுல
நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல,கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல......!!!!
ஒரு சின்ன கதை
***ஒரு வீடு இரு திருடர்கள்****
அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.
ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.
முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.
ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.
அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.
அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.
ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.
பின்குறிப்பு: கதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.
*************************