Sunday, November 9, 2014

உண்மை

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.!!!

Monday, September 29, 2014

வெற்றிப் பாதை

1. பெரிய விஷயங்களில் ஈடுபாடு

2. மாற்றங்களை உண்டாக்குதல்

3. தோல்வியை சமாளிக்கும் இயல்பு

4. எது முக்கியம் என்ற தெளிவு

5. வாழ்வில் ஒரு நிறைவு

மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கப்பலோட்டிய சிதம்பரனாரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவிய திரு. ஏக்நாத்ரானடே அவர்களை நினைத்துப் பாருங்கள் அல்லது ஒரு பெரிய ஏஜென்சி வியாபாரம் மட்டுமே செய்த பெருந்தொழில் அனுபமில்லாத ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவிய எம். ஏ சிதம்பரத்தை எண்ணிப்பாருங்கள்.
இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேசமாட்டார்கள் ஆனால் உயர்வு பெறுவதற் குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும்.
அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த லட்சியமும் அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனவும் பெருமையும் இவர்களையும் உயர்த்தி விடுகிறது இதுதான் லட்சியம் தரும் வலிமை.
மனித சமுதாயம் செல்ல வேண்டிய திசையை இவர்கள் சரியாக கணிக்கிறார்கள்.
பலருடைய வாழ்வுமே திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன.
சாதனை புரிபவர்கள் அந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றைப் பயனுள்ளவை களாக மாற்றிக் கொள்கிறார்கள். தடைக் கல்லைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி உயர்கிறார்கள்.
தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஏற்படுவது சகஜம்தான்.
ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். யைக் கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நாமும் வெற்றி பெற்றவர்களாக மாறலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
வெற்றிப் பாதை

Thursday, September 18, 2014

காதலோடு

மழைக்கு மட்டுமே
குடை பிடித்து நடந்தவன்

வெயிலுக்கும் குடை பிடித்து
நடந்தது உன்னோடுதான் !

நிலவுக்காக மட்டுமே
வானத்தை பார்த்து ரசித்தவன்

அம்மாவாசைக்கும் வானத்தை
ரசித்தது உன்னோடுதான் !

அலைகளை ரசிக்க மட்டும்
கடலுக்கு வந்தவன்

அமைதிக்காகவும் கடற்கரை
வந்தது உன்னோடுதான் !

இசைக்காக மட்டுமே குயிலை
ரசித்தவன்

இனிமைக்காகவும் குயிலை
நேசித்தது உன்னோடுதான் !

நான் வீழ்ந்தால் உன்

காதலோடு மட்டும்தான் !!


நான் வாழ்ந்தால் உன்னோடு
மட்டும்தான் !!

காதலித்துப் பார்



உன்னைச் சுற்றி 
ஒளிவட்டம் தோன்றும் 

உலகம் அர்த்தப்படும் 

ராத்திரியின் நீளம் 
விளங்கும் 

உனக்கும் 
கவிதை வரும் 

கையெழுத்து அழகாகும் 

தபால்காரன் 
தெய்வமாவான் 

உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடையும் 

கண்ணிரண்டும் 
ஒளிகொள்ளும் 

காதலித்துப் பார் 

*** 

தலையணை நனைப்பாய் 
மூன்றுமுறை பல்துலக்குவாய் 

காத்திருந்தால் 
நிமிஷங்கள் வருஷமென்பாய் 

வந்துவிட்டால் 
வருஷங்கள் நிமிஷமென்பாய் 

காக்கைக்கூட உன்னை 
கவனிக்காது 
ஆனால் – இந்த உலகமே 
உன்னையே கவனிப்பதாய் 
உணர்வாய் 

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் 
உருவமில்லா உருண்டையொன்று 
உருளக் காண்பாய் 

இந்த வானம் இந்த அந்தி 
இந்த பூமி இந்தப் பூக்கள் 
எல்லாம் 
காதலை கௌரவிக்கும் 
ஏற்பாடுகள் என்பாய் 

காதலித்து பார் 

*** 

இருதயம் அடிக்கடி 
இடம்மாறித் துடிக்கும் 

நிசப்த அலைவரிசைகளில் 
உனதுகுரல் மட்டும் 
ஒலிபரப்பாகும் 

உன் நரம்பே நாணேற்றி 
உனக்குள்ளே அம்புவிடும் 

காதலின் திரைச்சீலையைக் 
காமம் கிழிக்கும் 

ஹார்மோன்கள் 
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும் 
உதடுகள் மட்டும் 
சகாராவாகும் 

தாகங்கள் சமுத்திரமாகும் 

பிறகு 
கண்ணீர்த் துளிக்குள் 
சமுத்திரம் அடங்கும் 

காதலித்துப் பார் 

*** 

பூக்களில் மோதி மோதியே 
உடைந்து போக 
உன்னால் முடியுமா? 

அகிம்சையின் இம்சையை 
அடைந்ததுண்டா? 

உன்னையே உனக்குள்ளே 
புதைக்கத் தெரியுமா? 

சபையில் தனிமையாகவும் 
தனிமையை சபையாக்கவும் 
உன்னால் ஒண்ணுமா? 

அத்வைதம் 
அடைய வேண்டுமா? 

ஐந்தங்குல இடைவெளியில் 
அமிர்தம் இருந்தும் 
பட்டினி கிடந்து பழகியதுண்டா? 

காதலித்துப் பார் 

*** 

சின்னச் சின்னப் பரிசுகளில் 
சிலிர்க்க முடிமே 

அதற்காகவேனும் 

புலன்களை வருத்திப் 
புதுப்பிக்க முடியுமே 

அதற்காகவேனும் 

ஆண் என்ற சொல்லுக்கும் 
பெண் என்ற சொல்லுக்கும் 
அகராதியில் ஏறாத 
அர்த்தங்கள் விளங்குமே 

அதற்காகவேனும் 

வாழ்ந்துகொண்டே 
சாகவும் முடியுமே 
செத்துக் கொண்டே 
வாழவும் முடியுமே 

அதற்காகவேனும் 

காதலித்துப் பார் 

*** 

சம்பிரதாயம் 
சட்டை பிடித்தாலும் 

உறவுகள் 
உயிர்பிழிந்தாலும் 

விழித்துப் பார்க்கையில் 
உன் தெருக்கள் 
களவு போயிருந்தாலும் 

ஒரே ஆணியில் இருவரும் 
சிக்கனச் சிலுவையில் 
அறையப்பட்டாலும் 

நீ நேசிக்கும் 
அவனோ அவளோ 
உன்னை நேசிக்க மறந்தாலும் 

காதலித்துப் பார் 

சொர்க்கம் – நரகம் 
இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம் 

காதலித்துப் பார்



வைரமுத்து.

Thursday, July 24, 2014

Positive thought

எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!

இதெல்லாம் என்ன? மேலே படிக்கல்லாம்,

என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் என்று கூறுகிறேன்!

மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. 

ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......நான்........நான்....

அவமானம் ஒரு மூலதனம்

       கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.
ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.
""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?
இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!
("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)

தன்னம்பிக்கை

                                 உழைக்காமல் ஊதியம் இல்லை. படிக்காமல் அறிவு இல்லை. சுற்றாமல் பூமி இல்லை. இப்படி ஒவ்வென்றிற்கும் ஒரு விசை உண்டு. அந்த விசையால் மட்டுமே நாம் அவற்றை அடைய முடியும்.  உழைப்பு என்ற விசையால் மட்டுமே நாம் ஊதியம் என்ற ஒன்றை அடைய முடியும். படிப்பு என்ற விசையால்  மட்டுமே அறிவை அடைய முடியும். பூமி சுற்றினால் மட்டுமே உலகில் இரவும், பகலும் வரும். ஆதலால், ஓவ்வொருவரும் ஒரு செயலை நினைத்தால் மட்டும் போதாது. அதற்க்கு ஒரு விசையை கொடுத்தால்  தான் உருவம் பெரும். 

உலகில் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.  ஒன்று சாதித்தவன் இன்னொன்று சாதிக்காதவன். சாதித்தவன் உழைப்பாளி. சாதிக்காதவன் சோம்பேறி. உண்மையில் சோம்பேறியாக இருப்பதை விட உழைப்பாளியாக  இருப்பது தான் சுலபம். இந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். 

தனம்பிக்கை 1:
                                 விடியாத இரவென்று
                                 எதுவுமில்லை 
                                 முடியாத இரவென்று 
                                 எதுவுமில்லை 
                                 வடியாத வெள்ளமென்று 
                                 எதுவுமில்லை 
                                 வாழாத வாழ்க்கையென்று 
                                 எதுவுமில்லை 
                                                                  -வைரமுத்து 



தன்னபிக்கை 2:
                                  துன்பத்தை நினைத்து 
                                  மகிழ்ச்சியை இழக்காதே
                                  காதலை நினைத்து 
                                  வாழ்க்கையை இழக்காதே
                                  சோதனையை நினைத்து 
                                  சாதனையை இழக்காதே 
                                  தோல்வியை நினைத்து 
                                  வெற்றியை இழக்காதே

தன்னம்பிக்கை 3:
                                      நீ நடந்து போக ஒரு பாதை இல்லையே 
                                      என்று கவலை படாதே 
                                      நீ நடந்ததால் அதுவே ஒரு பாதை 
                                                                                                                -ஹிட்லர்


தன்னம்பிக்கை 4:
                                      எடுத்த செயலை முடிக்காமல் 
                                      கை விடும் போது  வெற்றிக்கு 
                                      எவ்வளவு அருகில் இருக்கிறோம் 
                                      என்று பலருக்கு தெரிவதில்லை 
                                      எனவே தோல்வியை தழுவுகின்றனர்
                                                                                                            -தோமஸ் எடிசன் 


தன்னம்பிக்கை 5:
                                     நீ விழுந்த போதெல்லாம் 
                                     தாங்கிப் பிடிக்கும்                                       
                                     இந்தக் கை
                                     மனம் உடையும் போதெல்லாம்
                                     தட்டிக் கொடுக்கும் 
                                     இந்தக் கை 
                                     தனியே நீ அழும்போதெல்லாம் 
                                     உன் கண்ணீரைத் துடைக்கும் 
                                     இந்தக் கை 
                                     அது வேறு  யார் கையும் அல்ல 
                                     உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை 
                                     அதை மட்டும் ஒரு போதும் 
                                     இழந்து விடாதே   !!!

தன்னம்பிக்கை 6:
                                      நண்பனையும் நேசி 
                                      எதிரியையும் நேசி 
                                      நண்பன் 
                                      வெற்றிக்கு 
                                      துணையாக இருப்பான் 
                                      எதிரி 
                                      வெற்றிக்கு 
                                      காரணமாக இருப்பான் 

தன்னம்பிக்கை 7:
                                      'இல்லை' என்று 
                                      ஒரு போதும் சொல்லாதே 
                                      'என்னால் இயலாது'
                                      என்று ஒரு நாளும் 
                                      சொல்லாதே
                                      ஏனெனில் 
                                      நீ வரம்பில்லா 
                                      வலிமை பெற்றவன்
                                                                                    -சுவாமி விவேகானந்தர்

தன்னம்பிக்கை 8:
                                      வலியோடு போராடினால் தான் 
                                      ஒரு பெண் தாயாக முடியும்  
                                      இருளோடு போராடினால் தான்   
                                      புழு வண்ணத்துப் பூச்சியாக முடியும் 
                                      மண்ணோடு போராடினால்  தான் 
                                      விதை மரமாக முடியும் 
                                      வாழ்க்கையோடு போராடினால் தான் 
                                      நீ வரலாறு படைக்க முடியும்

தன்னம்பிக்கை 9:
                                      ஓடும் போது  விழுந்து விடுவோம் என்று 
                                      நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து 
                                      ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்

தன்னம்பிக்கை 10:
                                       முயற்சி ஓர் பூ  
                                        நம்பிக்கை ஓர் விதை 
                                        தன்னம்பிக்கை ஓர் தளிர் 
                                        துணிவு ஓர் செடி 
                                        சாதனை ஓர் மரம் 
                                                                           
    -கவிமணியன்
                              

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....