உழைக்காமல் ஊதியம் இல்லை. படிக்காமல் அறிவு இல்லை. சுற்றாமல் பூமி இல்லை. இப்படி ஒவ்வென்றிற்கும் ஒரு விசை உண்டு. அந்த விசையால் மட்டுமே நாம் அவற்றை அடைய முடியும். உழைப்பு என்ற விசையால் மட்டுமே நாம் ஊதியம் என்ற ஒன்றை அடைய முடியும். படிப்பு என்ற விசையால் மட்டுமே அறிவை அடைய முடியும். பூமி சுற்றினால் மட்டுமே உலகில் இரவும், பகலும் வரும். ஆதலால், ஓவ்வொருவரும் ஒரு செயலை நினைத்தால் மட்டும் போதாது. அதற்க்கு ஒரு விசையை கொடுத்தால் தான் உருவம் பெரும்.
உலகில் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஒன்று சாதித்தவன் இன்னொன்று சாதிக்காதவன். சாதித்தவன் உழைப்பாளி. சாதிக்காதவன் சோம்பேறி. உண்மையில் சோம்பேறியாக இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது தான் சுலபம். இந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும்.
தனம்பிக்கை 1:
விடியாத இரவென்று
எதுவுமில்லை
முடியாத இரவென்று
எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று
எதுவுமில்லை
வாழாத வாழ்க்கையென்று
எதுவுமில்லை
-வைரமுத்து
தன்னபிக்கை 2:
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே
தன்னம்பிக்கை 3:
நீ நடந்து போக ஒரு பாதை இல்லையே
என்று கவலை படாதே
நீ நடந்ததால் அதுவே ஒரு பாதை
-ஹிட்லர்
தன்னம்பிக்கை 4:
எடுத்த செயலை முடிக்காமல்
கை விடும் போது வெற்றிக்கு
எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்கு தெரிவதில்லை
எனவே தோல்வியை தழுவுகின்றனர்
-தோமஸ் எடிசன்
தன்னம்பிக்கை 5:
நீ விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும்
இந்தக் கை
மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும்
இந்தக் கை
தனியே நீ அழும்போதெல்லாம்
உன் கண்ணீரைத் துடைக்கும்
இந்தக் கை
அது வேறு யார் கையும் அல்ல
உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை
அதை மட்டும் ஒரு போதும்
இழந்து விடாதே !!!
தன்னம்பிக்கை 6:
நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன்
வெற்றிக்கு
துணையாக இருப்பான்
எதிரி
வெற்றிக்கு
காரணமாக இருப்பான்
தன்னம்பிக்கை 7:
'இல்லை' என்று
ஒரு போதும் சொல்லாதே
'என்னால் இயலாது'
என்று ஒரு நாளும்
சொல்லாதே
ஏனெனில்
நீ வரம்பில்லா
வலிமை பெற்றவன்
-சுவாமி விவேகானந்தர்
தன்னம்பிக்கை 8:
வலியோடு போராடினால் தான்
ஒரு பெண் தாயாக முடியும்
இருளோடு போராடினால் தான்
புழு வண்ணத்துப் பூச்சியாக முடியும்
மண்ணோடு போராடினால் தான்
விதை மரமாக முடியும்
வாழ்க்கையோடு போராடினால் தான்
நீ வரலாறு படைக்க முடியும்
தன்னம்பிக்கை 9:
ஓடும் போது விழுந்து விடுவோம் என்று
நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து
ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்
தன்னம்பிக்கை 10:
முயற்சி ஓர் பூ
நம்பிக்கை ஓர் விதை
தன்னம்பிக்கை ஓர் தளிர்
துணிவு ஓர் செடி
சாதனை ஓர் மரம்
-கவிமணியன்
No comments:
Post a Comment