காலம்சுழன்று காட்சிகள் மாறினாலும்
கால்கள் நிற்பதில்லை
சுவடுகள் அழிவதில்லை !
தேடல்கள் தொடர்ந்தும் கிட்டவில்லை
தேவைகள் கூடுவதால்
தேடுவதும் ஓய்வதில்லை !
மக்கள்வெள்ளம் பெருகி வழிவதனால்
அலுவல்கள் விரிந்தாலும்
அரிதே இன்றும் வேலைவாய்ப்பு!
கல்விக்கூடங்கள் கடலென ஆனாலும்
தரமிக்க கல்வியிங்கே
தடமாறிப் போனதய்யா !
பள்ளி கல்லூரி வாயில்களில் இன்று
பையோடு காத்துள்ளனர்
கையோடு இடமும் பெற்றிட !
வியாபார அங்காடிகள் ஆனதப்பா
வணிக நோக்குடனே
விற்பனையில் கல்வியும் இங்கே !
கண்மூடி கண் திறப்பதற்குள் இன்று
மண்மேடுகள் ஆயினும்
மாளிகைகள் கோபுரங்கள் ஆகுதே !
தடம் புரண்ட மனங்கள் சிலரால்
தரைமட்டமும் ஆகிறதே
தரமிழந்த கட்டிட வேலையால் !
சாதிமத வெறியின்று தொடர்வதால்
சந்ததிகள் எதிர்காலம்
சறுக்கிவிழும் பனிக்கட்டி ஆனதே !
அரசாண்டு மக்களுக்கு உதவாமல்
ஆள்பவர் மட்டும் அரசராய்
அல்லாதவர் எவரும் அல்லலுடன் !
ஒருபிடி சோற்றுக்கு உழைப்பவனும்
ஈட்டிடும் காசை இழக்கின்றான்
இருநேரமும் அதில் குடிக்கின்றான் !
ஏழைகள் என்றுமே ஏழைகளாய்
ஏய்ப்பவர் மேய்ப்பவராய்
நடுத்தரம் புலம்பலுடன் உலவுகிறது !
அடுத்தவர் பணத்தை அள்ளிவழங்கி
கொடுத்து சிவந்த கரம்போல
கெடுத்தே வாழ்கின்றார் பலரிங்கே !
உண்மை நிரந்தரமாய் உறங்குகிறது
பொய்மை பேயாட்டம் ஆடுகிறது
பொறுப்பவர் போராட்டம் தொடர்கிறது !
உண்ணும் பொருட்களில் கலப்படம்
உலவிடும் மனிதர்களோ நிழற்படம்
உலகில் இனி எதுதான் எடுபடும் .....
இரக்கம் இவ்வுலகில் இறந்தது
உதவிடும் எண்ணம் மறைந்தது
நல்லவர் வாழ்வதும் குறைந்தது !
புரிதல் புவிதனில் அகன்றது
மனிதம் மண்ணிலே புதைந்தது
குற்றங்கள் மலைபோல குவிகிறது !
சிந்திக்கும் சிந்தையோ சிதறுகிறது
நிந்திக்கும் நெஞ்சங்கள் கூடுகிறது
நித்திரையில் தமிழினமோ உழல்கிறது !
இனப்பற்றும் இடையே இடம்பெயருது
மொழிப்பற்று நாளும் சிதைகிறது
தமிழினமே தமிழகத்தில் தகர்கிறது !
வினாக்கள் விடையின்றி தவிக்கிறது
கனாக்கள் களைப்பின்றி வருகிறது
பேனாக்கள் தடையின்றி எழுதுகிறது !
கால்கள் நிற்பதில்லை
சுவடுகள் அழிவதில்லை !
தேடல்கள் தொடர்ந்தும் கிட்டவில்லை
தேவைகள் கூடுவதால்
தேடுவதும் ஓய்வதில்லை !
மக்கள்வெள்ளம் பெருகி வழிவதனால்
அலுவல்கள் விரிந்தாலும்
அரிதே இன்றும் வேலைவாய்ப்பு!
கல்விக்கூடங்கள் கடலென ஆனாலும்
தரமிக்க கல்வியிங்கே
தடமாறிப் போனதய்யா !
பள்ளி கல்லூரி வாயில்களில் இன்று
பையோடு காத்துள்ளனர்
கையோடு இடமும் பெற்றிட !
வியாபார அங்காடிகள் ஆனதப்பா
வணிக நோக்குடனே
விற்பனையில் கல்வியும் இங்கே !
கண்மூடி கண் திறப்பதற்குள் இன்று
மண்மேடுகள் ஆயினும்
மாளிகைகள் கோபுரங்கள் ஆகுதே !
தடம் புரண்ட மனங்கள் சிலரால்
தரைமட்டமும் ஆகிறதே
தரமிழந்த கட்டிட வேலையால் !
சாதிமத வெறியின்று தொடர்வதால்
சந்ததிகள் எதிர்காலம்
சறுக்கிவிழும் பனிக்கட்டி ஆனதே !
அரசாண்டு மக்களுக்கு உதவாமல்
ஆள்பவர் மட்டும் அரசராய்
அல்லாதவர் எவரும் அல்லலுடன் !
ஒருபிடி சோற்றுக்கு உழைப்பவனும்
ஈட்டிடும் காசை இழக்கின்றான்
இருநேரமும் அதில் குடிக்கின்றான் !
ஏழைகள் என்றுமே ஏழைகளாய்
ஏய்ப்பவர் மேய்ப்பவராய்
நடுத்தரம் புலம்பலுடன் உலவுகிறது !
அடுத்தவர் பணத்தை அள்ளிவழங்கி
கொடுத்து சிவந்த கரம்போல
கெடுத்தே வாழ்கின்றார் பலரிங்கே !
உண்மை நிரந்தரமாய் உறங்குகிறது
பொய்மை பேயாட்டம் ஆடுகிறது
பொறுப்பவர் போராட்டம் தொடர்கிறது !
உண்ணும் பொருட்களில் கலப்படம்
உலவிடும் மனிதர்களோ நிழற்படம்
உலகில் இனி எதுதான் எடுபடும் .....
இரக்கம் இவ்வுலகில் இறந்தது
உதவிடும் எண்ணம் மறைந்தது
நல்லவர் வாழ்வதும் குறைந்தது !
புரிதல் புவிதனில் அகன்றது
மனிதம் மண்ணிலே புதைந்தது
குற்றங்கள் மலைபோல குவிகிறது !
சிந்திக்கும் சிந்தையோ சிதறுகிறது
நிந்திக்கும் நெஞ்சங்கள் கூடுகிறது
நித்திரையில் தமிழினமோ உழல்கிறது !
இனப்பற்றும் இடையே இடம்பெயருது
மொழிப்பற்று நாளும் சிதைகிறது
தமிழினமே தமிழகத்தில் தகர்கிறது !
வினாக்கள் விடையின்றி தவிக்கிறது
கனாக்கள் களைப்பின்றி வருகிறது
பேனாக்கள் தடையின்றி எழுதுகிறது !
No comments:
Post a Comment