Tuesday, April 24, 2018

மகனுக்கு, அப்பா முதல் கடிதம்


முதல் கடிதம்
அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.
சத்யஜித் ரே
வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே, சிறு வயதில் தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், தாயுடன் சென்று மகாகவி தாகூரை, அவர் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் சந்தித்து ஆசி பெறுவார். ஒரு முறை அப்படி வாழ்த்து பெற சந்திக்கையில், தாகூர் அவரிடம் ஒரு கவிதையை எழுதிக்கொடுத்தார். அந்தக் கவிதை... "நான் உலகத்தின் பல நாடுகளுக்குச்
சென்று வந்திருக்கிறேன்
இந்த உலகில் உள்ள
மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள்
எல்லாவற்றிலும் என் பாதம் பட்டிருக்கிறது.
ஆனால் என் மகனே
என் வீட்டுத் தோட்டத்திலுள்ள
புல்லின் நுனியில் உறங்கும்
பனித் துளியை மட்டும்
பார்க்கத் தவறிவிட்டேன்.”
கவிதையைக் கொடுத்துவிட்டு சத்யஜித்ரேவிடம் தாகூர் சொன்னார். "இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது இப்போது இந்தச் சிறு வயதில் உனக்குப் புரியாது. வளர்ந்த பின் எடுத்துப் படித்துப் பார். புரிந்தாலும் புரியாலும்."வருடங்களுக்குப் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் படித்த சத்யஜித்ரே, அதன் அக தரிசனத்தை உணர்ந்து "பதேர் பாஞ்சாலி" படம் எடுத்தார்.
மகனே
என் அன்பு மகனே! உனக்கும் இதையே தான் சொல்கிறேன். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.
பூக்குட்டியே
என் பிரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
இன்பம்
உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. "தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்" என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக் கொண்டு இருந்தாய்.
பொம்முக்குட்டியே
நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசிர்வதித்தாய். என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.

செல்லமே
என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரி்க்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத் தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்
சிறு தளிரே
என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார். எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. என் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு.

உழைக்கத் தயங்காதே
உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில் தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம். இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்து கொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.
உருவாக்கப் பழகு
இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. அந்தக் கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்க கோடைக் காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக் கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு

வயதில் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் என் கனவுகளை ஆசிர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் எதிராகும். என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்து வைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

புத்தகங்கள்
நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

உதவி செய்
கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்

அன்பு
இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் நீ உணர்வாய்.

கடிதம்
நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான். இப்படிக்கு, உன் அன்பு அப்பா.

Sunday, March 18, 2018

Think

*வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.*

*மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.*

 போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

நல்ல வேளை. இதோடு போச்சு.

 உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.

சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

 இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

கஷ்டம் தான் … ஆனா முடியும்.

. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?*

 இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?*

 இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?*

இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.*

 இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.*

முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.*

கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.*

திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.*

ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.*

கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.*

எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?*

அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.*

*#வீழ்வது_கேவலமல்ல_நண்பர்களே.....,*

*#வீழ்ந்தே_கிடப்பது_தான்_கேவலம்.*



*#எண்ணங்கள்*

*எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.*

*"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.*

*எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.*

*எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*

*எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.*

*நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.*                                 

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்

Thursday, March 15, 2018

SSD VS HDD

AttributeSSD (Solid State Drive)HDD (Hard Disk Drive)
Battery Life/Power DrawDraws an average of 2-3 watts on average. Increases battery boost by 30 minutesDraws an average of 6-7 watts on average. Uses more battery power
CostAt $0.02/GB if you have a 1TB drive, it is expensiveAt $0.03/GB if you have a 4TB drive, it is relatively cheap
CapacityNot more than 1TB for notebooks but maximum 4TB for desktopsMaximum 2 TB for notebooks but a maximum of 10TB for desktops
Operating System Boot TimeAn average boot time of 10-13 secondsAn average boot time of 30-40 seconds
NoiseNo sound produced because of lack of moving partsSpinning and clicks are audible and can be heard
VibrationNo vibration produced as there are no moving partsVibrations are produced because of the platters' spinning
Heat ProducedLack of moving parts and low power draw equals less heatHigh power draw and the presence of moving parts mean more heat production than SSD
Failure Rate2.0 million hours1.5 million hours
Write Speed/File Copy200 MB/s to up to 550 MB/s50 MB/s to up to 120 MB/s
Encryption(FDE) Full Disk Encryption(FDE) Full Disk Encryption
File Opening SpeedApproximately 30% quicker than the HDD.Comparatively slower than the SSD.
Effect of MagnetismSafe from magnetism effectsData can be erased by mag

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....