Sunday, May 12, 2019

IPL 2019 final

விளையாட்டு
கேட்ச் ட்ராப் v

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.



ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமும், சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லாமலும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொதப்ப 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல வாட்சன், டூபிளசிஸ் ஓப்பனிங் கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறான அதிரடியுடன் தொடங்கிய இந்த ஜோடி முதல் மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தது. நான்காவது ஓவரை பிடித்த இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என குர்னால் பாண்டியா ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டும் ஆனார். அதன்பிறகு வந்த ரெய்னா 8 ரன்களுக்கு வெளியேற அம்பதி ராயுடு ஒரு ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறிய சென்னை அணிக்கு கேப்டன் தோனியும் அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை. ஹர்திக் வீசிய 13வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.



கடைசி கட்ட பரபரப்பு

இதன்பிறகு டீம் அவ்வளவு தான் என நினைத்தபோது தான் பிராவோவுடன் சேர்ந்து தனது அதிரடியை காட்டினார் வாட்சன். சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர் என மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், குர்னால் பாண்டியா வீசிய 18வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதகளம் செய்தார் செய்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18.2வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராவோ வெளியேறினார். அடுத்ததடுத்த பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க அந்த ஓவரின் கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா மூலமாக நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஆறு பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா பந்துவீசினார்.

கேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை!#MIvCSK
41 minute's ago
`எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் எனச் சொன்னதில்லை!' - ஸ்டாலினைக் கிண்டல் செய்யும் எடப்பாடியின் சர்ச்சைப் பேச்சு
2 hour's ago
'அயோக்யா' என்னுடைய கதை?! - பார்த்திபன் பரபரப்பு குற்றச்சாட்டு
8 hour's ago


முதல் இரு பந்துகளில் வாட்சனும், ஜடேஜாவும் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். ஐந்தாவது பந்தை மலிங்கா புல்டாசாக வீச அதில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற போது மலிங்காவின் யார்க்கர் பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக ஒரு ரன்னில் சென்னை அணி கோப்பையை நழுவவிட்டது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.

Wednesday, May 8, 2019

உண்மை..

இயலாதவன் கையில் எடுக்கும்
இறுதி ஆயுதமே " *விமர்சனம்* ".!!


இயன்றவன் அதை தடுக்க
ஏந்திடும் ஆயுதமே " *புன்னகை* "..!!

நமக்காக..

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

₹மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
 உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....

₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

₹பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

Saturday, May 4, 2019

unthinkable becomes acheivable

வானமே எல்லை என்று இப்போது யாரும் சொல்வதில்லைஆகாயமேஉன் எல்லைகளை அகலப் படுத்து என்று கூறும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்சுருங்கி விட்ட உலகில் விரிந்து விட்டது மனிதனின்சிந்தனை வீச்சும் செயல் வேகமும்.
ஒரு அலுவலகத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் பூரணத்துவம் எங்கள் நோக்கம் சிறப்பானவைகளைபொறுத்துக் கொள்வோம் செயல்பாடுகளும் அதன் விளைவுகளும் அசாதாரணமாக இருக்க வேண்டும்என்பதில் எப்படிப்பட்ட ஈர்ப்பும்ஈடுபாடும் என்று பாருங்கள்தரம் என்பது பொருட்களுக்கும்சேவைகளுக்கும் மட்டும் தான் என்று அர்த்தமில்லைஒவ்வொரு தனி மனிதனுக்கும் அது பொருந்தும்.
மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் தரமிக்கவையாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துஇருக்க முடியாதுவிழிப்புணர்வும்விடாமுயற்சியும் ஒருவனை தரமான மனிதனாக மாற்றும்தரம் என்பதுஒரு நடவடிக்கையை மட்டும் குறிக்காதுஅது கலாசாரத்தின் வெளிப்பாடு.
அசாதாரணமானவர்கள் தான் அசாதாரமான சாதனைகள் செய்ய முடியும் என்பதில்லைசாதாரணமானவர்களும்அசாதாரணமான நிகழ்வுகளை நிகழ்த்த முடியும்நம்மால் முடியும் என்ற திடமானநம்பிக்கையும் திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் நினைத்துப் பார்க்க முடியாதவைகளை நடத்திக் காட்டமுடியும் (unthinkable becomes achievable). நாம் நேற்று எப்படி இருந்தோம்இன்று எப்படி இருக்கிறோம்என்பதைப் பொறுத்ததல்லநாளை எப்படியிருக்க முடியும் என்பதுகம்பளிப்பூச்சியில் அதுவண்ணத்துப்பூச்சியாக மாறப் போவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லைஎதிர்கால வெற்றிகளால்கடந்தகால தோல்விகளை கதிகலங்கச் செய்ய முடியும்.
இன்றைய உலகம் நமக்கு சொல்லித் தரும் பாடம் என்னவென்றால் எதிர்பாராததை எதிர்பாருங்கள், (expect the unexpected) மாற்றங்கள் மலிந்து விட்ட உலகம்அதனால் ஏற்படும் வாய்ப்புகளும் சவால்களும் ஏராளம்மாற்றங்களை சரிவர புரிந்து கொண்டு அவைகளை வரவேற்று ஏற்றுக் கொண்டு சவால்களைசாதனைகளாக மாற்றி காட்ட இன்றைய இளைஞர்கள் தயாராக வேண்டும்.
தொடர்ச்சியான சாதனைகளும்முன்னேற்றங்களும் நம் வாழ்க்கைக்கு வாழ்வு (life to life) கொடுக்கும்ஜப்பானியர்களின் வெற்றியின் ரகசியமே தொடர்ச்சியான மேம்பாடு தான் (continual improvement) வாழ்க்கையில் ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்று விட்டு நீண்ட காலம் ஓய்வெடுப்பது விவேகம் ஆகாதுநமது நேற்றைய சாதனை இன்றும் மிக பெரிதாக தெரியுமானால் இன்று நாம் ஒன்றும் செய்யவில்லைஎன்று தான் அர்த்தம். (if our past achievement still look great, we have done nothing today). கடந்த கால சாதனைகளைநாம் இன்றும் கொண்டாடிக் கொண்டிருந்தால் திருப்திகரமான இயலாமை (satisfactory underperformance) நம்மிடம் குடிகொண்டு விடும்.
சந்தோஷம் என்பது சின்ன சின்ன விஷயங்களில் உள்ளதுவெற்றி என்பது பெரிய பெரிய சாதனைகளில்உள்ளதுமனித சக்தியையும்நேரத்தையும் சரியான திசையில் முதலீடு செய்யும் போது சந்தோஷமும்வெற்றியும் ஒருசேர வந்தடையும் இளைஞர்கள் வாழ்வில் வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றனஅவைகளைஅடையாளம் கண்டு ஆர்வத்தோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதனைகள் படைக்க முயலும் போது பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்தடைகள் பலஉருவாகலாம்சுய ஊக்கத்தின் (self motivation) துணையோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்ஊக்கம்என்பது மனதுக்கு கொடுக்கும் சத்துணவு (Mental Nutrition). துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பாக தான்இருக்கும்ஆனால் கப்பல்கள் அதற்காக கட்டப்பட்டவை அல்லவாழ்க்கைப் பயணத்தில் எதிர்நீச்சல்போட்டு தான் வெற்றிவாகை சூட முடியும்.
இன்று என்பது நாம் நேற்றுப் பார்த்து பயந்த நாளை தான்இன்று நன்றாகத் தான் இருக்கிறோம்.
பயந்தபடிவருத்தப்பட்டபடி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை என்ற நம்பிக்கை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும்அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்வை எதிர்நோக்கினால் சிக்கல்களும்சிறகாகும்நாம் விரும்பும் வண்ணம் நம் வாழ்வை உருவாக்கலாம் என்பதை வண்ணத்துப்பூச்சி நமக்குஞாபகப்படுத்தி கொண்டே இருக்கட்டும்.

- டாக்டர் கே.ஜாபர் அலி

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....