Thursday, December 20, 2012

மதம் ...!

நீரையும் பாலையும் பிரித்து
தனக்கு வேண்டியதை எடுக்கிறது
அன்னப் பறவை ..


ஏன் மானிடா ? நீ மட்டும்
கண்ணிருந்தும் குருடனாய் வாழ்கிறாய்?


ஒரு விதைக்கு பல மணிகள் தரும்
நெற்கதிர் கூட உழைப்பாளியின் வியர்வைக்கு
தலை சாய்த்து வணங்குகின்றது ..


மானிடா நீ மட்டும் ஏனடா ?
அறிவிறிந்தும் அற்ப பதராய்  வாழ்கிறாய்?


இன்னுமா புரியவில்லை உனக்கு..?

ஒன்றுபடுத்த வந்த
மதங்களின் நோக்கத்தை
அறியாமல் ,

சுயநலக்கார மூடர்களின்
வசிய  வார்த்தைகளை நம்பி
வேறுபட்டு சண்டையிட்டு மடிகிறாயே..ஏனடா...?


ஐந்தறிவு பறவையே பகுத்துணரும் போது
சற்று சிந்தி
நமக்கு ஆறறிவு உண்டா? என ...


நீ சிந்தித்திருந்தால் 
புரிந்திருக்கும் உனக்கு  எப்போதே..!

சரி விடு
..
இன்று நினைத்தாலும்
வென்று காட்டலாம்....

எத்தனையோ  பெரிய மலைகளை
உடைத்திருக்கிறது சிறிய உளி ..

புதைத்த மண்ணையும் பிளந்து கொண்டு
வெளிவருகிறது சிறு விதை ...

தன் தலையை உடைப்பவற்க்கு கூட
கண்ணீரை இளநீராக தருகிறது தென்னை ..


உன்னால் முடியாதா? என்ன ...!

மதங்களற்ற   மனிதநேயப்  பாதையில்
மலரட்டூம்  இளைஞனின்
மறுமலர்ச்சி இந்தியா ....

வாழ்க எந்நாடு .....என்றும் வல்லரசாய்......


 ....
தாராபுரம் சதீஸ்



 

No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....