Monday, December 10, 2012

For Friend and Lover

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.


குறிப்பாக உங்களது துணை  அல்லது நண்பர் வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.

அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு அல்லது நண்பர்க்கு  உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில்  இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.
மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்


சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் அல்லது நண்பரின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....