நிரந்தரமான மகிழ்ச்சி :
துணிவான
முடிவுகளில் இருக்கிறது .
*
பணிவான
வார்த்தைகளில் இருக்கிறது...
*
கனிவான
அணுகுமுறையில் இருக்கிறது..
*
பரிவான
உதவிகளில் இருக்கிறது...
----------------------------*
தோல்வி
வந்தால் பொறுமை அவசியம்..
*
வெற்றி
வந்தால் பணிவு அவசியம்..
*
எதிர்ப்பு
வந்ததால் துணிவு அவசியம்...
*
எது
வந்தாலும் நம்பிக்கை அவசியம்...
-------------
*
கவனக்குறவை
உணர்த்தும் தோல்விகளுக்கு,
*
திருத்தத்
தூண்டிய தவறுகளுக்கு,
* வைராக்கியம்
வளர்த்த அவமானங்களுக்கு,
*
பாராட்டும்படி
வளரச் செய்த பரிகாசங்களுக்கு
நன்றி
சொல்லுங்கள்...
-----------------*
ஆற்றல்
சிதறாமல் திரட்டிக் கொள்ளுங்கள்.
*
அடிப்படை
சரியாமல் நிறுத்திக்
கொள்ளுங்கள்..
*
மாற்று
ஏற்பாட்டை வகுத்துக்
கொள்ளுங்கள்...
*
மறுபடி
எழுவோம் என் உறுதி கொள்ளுங்கள்..
*
உங்கள்
விருப்பத்திற்கு வாழ்க்கையை
வளைக்கலாம்.
*
உங்கள்
கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
*
உங்கள்
உறுதியினால் சிரமங்களைக்
கடக்கலாம்.
*
உங்கள்
எல்லைகளை நீங்களே உடைக்கலாம்..
No comments:
Post a Comment