Friday, September 28, 2012

கனவு



கனவு 

ஆஹா !...என் இந்திய தேசமா இது ?

1 ரூபாய் = 48 .83 டாலர் ,
கல்வி பயில வரும் ஆஸ்திரேலியர்கள்,
ஜனநாயகம் அறிய வரும் இங்லாந்து அறிஞர்கள் ,
நடப்புத் தொழில்நுட்பம் இது தானே
என ஐயமிடும் ஜப்பானியர்கள் ,
எங்களுக்கும் பயிற்சி தாருங்கள்
என்று வரும் சீன விளையாட்டு வீரர்கள் ,

நாட்டு நலனை பற்றிய இணைய அரட்டைகள் ,
பள்ளி கல்லூரி உணவகத்தில் பாடப் பேச்சு ,
தியேட்டருக்கு பதில் நுலகங்கள் ,
வசீகரப் பேச்சிற்கு முதலீடு செய்யாத மக்கள் ,
தன் கையே தனக்கு உதவி என
அரசாங்க பணிக்கு காத்திராத என் இளைய சமுகம்
விவசாயம் செய்ய வரும் என்னருமை தோழர்கள் ,

24 மணி நேர மின்சார வசதி,
356 நாட்களும் குடிநீர் சேவை ,
தட்டுப்பாடில சிலிண்டர் ,
விலை ஏறா பெட்ரோல் டிசல்,
புதுப்பிக்கவல்ல எரி சக்தி வளங்கள் ,

லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள் ,
ஊழலற்ற நல்லாட்சி ,

எங்கும் வளமை,
எதிலும் செழுமை ,
தரணியெங்கும் இந்தியன் பெருமை .....

காத்திருக்கிறேன்
என் கனவும் நனவாகும் என்று.....

(பளிக்கும் கனவா ? இல்லை பகல் கனவா ?)


தாராபுரம் சதீஸ்


No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....